முதன்முறையாக தனது கட்சிக்காக வாக்களித்த மஹிந்த!

நாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

அரசியல் பிரபலங்கள் தமது வாக்குளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது வாக்கினை வழங்கினார்.

வீரக்கெட்டிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ச மகா வித்தியாலயத்தில் மஹிந்த தனது வாக்கினை வழங்கினார்.

மஹிந்தவின் கோட்டையான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் 443 தேர்தல் நிலையங்களில் வாக்களிக்கப்படுகின்றன.

நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முதன்முறையாக மஹிந்த தலைமையிலான பொதுஜன முன்னணி கட்சி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.