மக்களின் வெறுப்பை சம்பாதித்த பிரபலம்: மீண்டும் சர்ச்சையில்!

அமெரிக்காவின் பிரபல நட்சத்திரமாக விளங்கிவரும் லோகன் பால் தற்போது மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவின் இணையதள ஹீரோவாக வலம் வருபவர் லோகன் பால்(வயது 22), இவரின் YOUTUBE பக்கத்திற்கு 16 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

அந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டின் தற்கொலை காடாக அறியப்படும் Aokigahara காட்டிற்கு தன் நண்பருடன் சென்றிருந்த லோகன், அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சடலத்தை வீடியோவாக பதிவு செய்து தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அந்த காட்சிகள் வெளியான சில மணிநேரத்தில் லோகனுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தது.

அதனால் தான் செய்தது தவறு என மன்னிப்பு கோரியிருந்த லோகன், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இம்முறை உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு எலிகளை டேசர் என்னும் மின் அதிர்வை கொடுக்கும் துப்பாக்கியால் லோகன் சுடுவது போல் அந்த காட்சிகள் அமைந்துள்ளது.

வீடியோவை காண

இந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் லோகனுக்கு கடும் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

உலகின் முக்கிய விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவும் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில் லோகனின் வீடியோ அவரது பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதம் ஏற்பட்ட சர்ச்சையின்போது, தான் தெரியாமல் செய்துவிட்டதாக லோகன் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.