ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆன கிராம மக்கள்: எப்படி?

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும், ராணுவத்தினரால் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் போம்ஜா, இந்திய- சீன எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவ அமைவிடம் உருவாக்க, சுமார் 200 ஏக்கர் நிலம் இந்திய ராணுவத்தினரால் வாங்கப்பட்டது.

சீனாவின் எல்லை மீறலை முறியடிக்க இந்த நிலத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த நிலத்திற்கு என்ன விலையோ, அந்த தொகையை நில உரிமையாளர்களிடம் அரசு கொடுத்துள்ளது.

இதற்காகப் பெரிய விழா நடத்தி, அருணாச்சலப்பிரதேச முதல்வர் பேமா கான்து அனைவருக்கும் நிலத்திற்கான பணத்தை கொடுத்தார்.

அக்கிராமத்தில் உள்ள 31 குடும்பங்களுக்கு சுமார் 40.8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு குடும்பம் அதிகமாக 6.73 கோடி பெற்றுள்ளது, மற்றொரு குடும்பம் 2.45 கோடி பெற்றுள்ளது.

இதர 29 குடும்பங்கள் 1.09 கோடியை பெற்றது. இதன் மூலம், இந்தியாவிலேயே பணக்கார கிராமம் என்ற பெருமையை ‘போம்ஜா’ கிராமம் பெற்றுள்ளது, அந்த கிராமத்தில் மட்டுமே அதிக கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.

மேலும், முறையான தகவல்கள் கிடைத்தப் பின்னர், அந்தக் கிராமம் ஆசியாவிலேயே பணக்கார கிராமமா என்றும் அறிவிக்கப்படும்.