பிரிகேடியர் பிரியங்கரவின் நிலைப்பாடு….. மஹிந்த புதிய விளக்கம்

பிரியங்கரவை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டமையானது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே எனக் குறிப்பிட்ட அவர், புலம்பெயர்ந்த புலிகள் ஆதரவுத் தமிழர்களின் இந்த நடவடிக்கையை இலங்கைலுள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ தனது தொண்டையைச் சொறிந்தாரே தவிர ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தவில்லை என புதிய கருத்து கூறியுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என்ற சைகை மூலம் லண்டனில் இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகச் செயற்படும் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இது குறித்த காணொளி சமூக வலையத்தளங்களிலும் இணையவழி ஊடகங்களிலும் வெளியாகிய நிலையில் அவரைப் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யும் அறிவுறுத்தல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு அனுப்பியது.

அவ் உத்தரவை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து அவரை மீண்டும் பதவியில் தொடர்வதற்கான பணிப்புரையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.