தமிழகத்தில் இளைஞர் விபத்தில் சிக்கி ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடியும் ஆம்புலன்ஸ் வராததால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் இச்சடி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற குப்பிடையான் பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது அவர் எதிர்பாரதவிதமாக மணல் ஏற்றி வந்த லாரி மோதியதால் படுகாயமடைந்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனா விபத்து நடந்து 1 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசார் வரவில்லை. பின்னர் அந்த இளைஞர் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அங்கு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக புதுக்கோட்டை தஞ்சாவூர் செல்லும் பிரதான சாலையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டன.
பொதுமக்கள் கூறுகையில், அடிபட்டு உயிருக்கு பேராடிய நிலையில் ஆம்புலன்ஸ் வராததே உயிர்போக காரணம் என்றும், சில கிலோ மீற்றர் தொலைவில் மருத்துவ கல்லூரி இருந்தும் இந்த நிலைமையா என்ற ஆதங்கம் பட்டுள்ளனர்.






