இக்கட்டுரையில் ஒருவரது அன்றாட பழக்கவழக்கங்கள் எப்படி எதிர்காலத்தில் பெரும் பாதிப்பைக் கொண்டுள்ளன என்பதை விளக்கும்.
அதைப் படித்து தெரிந்து உங்களது எதிர்காலம் எவ்வளவு நன்றாக அல்லது கெட்டதாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு எடுங்கள்.
1
குளியலறையைப் பயன்படுத்தி விட்டு, அந்த குளியலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் அழுக்குத் துணிகளை அந்த அறையிலேயே அசிங்கமாகவும், அழுக்காகவும் வைத்திருந்தால், அது ஜாதகத்தில் உள்ள சந்திரனின் நிலையை பலவீனப்படுத்தி, தொழில் மற்றும் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
2
நடக்கும் போது தரையை தேய்த்தவாறு நடக்கும் பழக்கம் இருந்தால், அப்பழக்கத்தை உடனே மாற்றுங்கள். ஏனெனில் இப்படி தரையை தேய்த்துக் கொண்டே நடப்பது என்பது உங்கள் விதியைச் சுற்றி அழுக்கைக் கொண்டு வருவதைக் குறிக்கும். இப்பழக்கம் ராகு வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது.
3
உணவு உண்ட பின், சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்யாமல், அப்படியே எழுவார்கள். இப்பழக்கம் வாழ்வில் நிலையான வெற்றியை அடைய பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பதைக் குறிக்கிறது. எனவே சாப்பிட்ட பிறகு அவ்விடத்தை சுத்தம் செய்யுங்கள். இதனால் சனி மற்றும் சந்திர தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
4
நாள் முழுவதும் வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், கை, கால், முகத்தைக் கழுவாமல் இருந்தால், அது வாழும் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டு வருவதற்கு சமம்.
மேலும் இந்த செயலால் மன அழுத்தம் தான் அதிகரிக்கும். ஆகவே வீட்டில் நிம்மதியாக இருக்க நினைத்தால், கை, கால், முகத்தைக் கழுவுங்கள்
5
தினமும் வீட்டில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.
இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதைவிட்டு தெய்வ சிலைகள் மற்றும் பூஜை அறை அசுத்தமாக இருந்தால், அது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி கல்வி, செல்வம், குடும்ப வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
6
வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு முதலில் குளிர்ந்த நீரைக் கொடுக்கும் பழக்கத்தைக் கொள்வதன் மூலம், விருந்தினர்களின் உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
மேலும் இப்பழக்கத்தால், விருந்தினர்களைச் சுற்றியுள்ள ஆற்றலால் வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்கும். மேலும் இப்பழக்கத்தால் ஜாதகத்தில் உள்ள ராகு மற்றும் காலஷர்ப தோஷத்தைப் போக்கும்.
7
காலணிகளை முறையாக அடுக்கி வைக்காமல், சிதற விட்டிருந்தால், அது வாழ்வில் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எனவே இம்மாதிரியான தவறை இனிமேல் செய்யாதீர்கள்.