வாக்காளர் அட்டையை பணம் கொடுத்து வாங்கும் அரசியல்….

வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை பணம் கொடுத்து வாங்கும் அரசியல் சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இது தொடர்பான தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிரான கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நபர்களின் வாக்காளர் அட்டை மற்றும் அடையாள அட்டை என்பன அவ்வாறு பணம் கொடுத்து வாங்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது ஒரு கட்சி அல்லது யாரேனும் ஒரு நபருக்கு வாக்களிப்பதை தடுக்கும் வகையிலான முறைகேடான செயல் என அவர் கூறியுள்ளார்.

எனவே அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.