உத்தரப்பிரதேசம் மாநிலம் பரிதாபாத் பகுதியில், திருமணமான நபர் ஒருவர், 15 வயது சிறுமியை கட்டி வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் கொட்டா பகுதியை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட சிறுமி. 15 வயதே ஆன அவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த விபத்து ஒன்றில் தனது பெற்றோரை இழந்துள்ளார்.
பெற்றோர் துணை இல்லாமல் இருந்த சிறுமியையும் அவரது சகோதரர்களையும் அவரது பாட்டி வளர்த்து வந்தார்.
பாட்டி, அவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மாறாக, சிறுமியை சுரேந்தர் என்பவரிடம் 4000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
சுரேந்தர், சிறுமியை துன்புறுத்தி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, டெல்லியை சேர்ந்த தம்பதியினரிடம் வீட்டுவேலை செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளார்.
டெல்லியில் எந்த விதமான துன்புறுத்தலும் இல்லாமல் இரண்டு வருடம் நன்றாக வேலை புரிந்துள்ளார். இரண்டு வருடம் முடிந்ததும் சுரேந்தர், தனது நண்பரான மணி மிஷ்ராவின் வீட்டில் வேலை புரிவதற்கு சிறுமியை அனுப்பிவைத்துள்ளார்.
மிஷ்ரா, டெல்லியில் சிறுமி சம்பாதித்த 30,000 ரூபாயை வலுக்கட்டாயமாக பறித்தது மட்டுமல்லாமல், தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டிலிருக்கும் சமையத்திலேயே, அடுப்பறையில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
மேலும், சிறுமி தடுத்தாலோ, கூச்சலிட்டாலோ, கொன்றுவிடுவதாக கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். இதுமட்டுமல்லாமல், சிறுமியின் கால்களை கயிற்றினால் கட்டிப்போட்டு சிகரெட்டினால் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார்.
இதனையடுத்து. கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்கிருந்து தப்பிய சிறுமி, இரண்டு இளைஞர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி கூறியுள்ளார். பின்னர், இதுகுறித்து பொலிசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரிக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் பொலிசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
குற்றவாளிகள் மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தினரையும், சிறுமியை 4,000 ரூபாய்க்கு விற்ற பாட்டியையும் பொலிசார் தேடிவருகின்றனர். தற்பொழுது, சிறுமி ஃபரிதாபாத்தில் உள்ள பி.கே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.






