எல்லா தொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்பட்டன! – மைத்திரி

கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பல தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு தன்னை நாட்டின் ஜனாதிபதியாக மக்கள் தெரிவு செய்தார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் உரையாற்றி போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“கடந்த அரசாங்கத்தின் போது நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. உலக நாடுகள் எமது நாட்டை ஒதுக்கி வைத்திருந்தன. ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் அந்த நிலைமையினை நான் மாற்றினேன்.

இன்று உலக நாடுகள் பலவும் எமக்கு உதவிகளை வழங்கி வருகின்றன. கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு இடையில் கூட தொலைபேசியில் உரையாட முடியாத நிலை காணப்பட்டது.

அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பல தொலைபேசி உரையாடல்கள் கடந்த அரசாங்கத்தில் ஒட்டு கேட்கப்பட்டதாக” ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.