முக்கிய இடமாக மாற உள்ள மாவட்டம்!

இந்த சமுத்திரத்தின் முக்கியமான இடமாக கிழக்கு மாகாணத்தில் ஒரு மாவட்டம் மாற உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் புதிய பஸ் தரிப்பு நிலையம் முன்பாக இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கடனால் மூழ்கியிருந்த நாட்டையே கடந்த காலத்தில் நாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டோம். அந்த கடனை அடைப்பதற்கு நாட்டின் வருமானம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இதனால் கடனை மீள செலுத்துவதற்காகவே மீண்டும் கடன் பெற்றுக்கொண்டோம். இன்று அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த வருமானத்தைகொண்டு பழைய கடனை மீள செலுத்தி வருகின்றோம்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.