150 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அபூர்வ சந்திர கிரகணம் தொடங்கியுள்ளது.
உலகிலேயே அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக தோன்றியுள்ள கிரகணம், மற்ற நாடுகளிலும் தெரியவரும்.
இக்கிரகணத்தை ரசித்து பார்க்கும் மக்கள் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
முதல் இணைப்பு- இன்று சந்திர கிரகணம்
முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ள நிலையில் நிலவானது சூப்பர் நிலாவாக பெரிதாக தெரிவதோடு ப்ளூ மூன் மற்றும் பிளட் மூன் ஆகியவையும் இன்று நிகழ உள்ளன.
சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போதும், பூமியின் நிழல் நிலவின் மீது படும்போதும் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.
முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படும் நிலையில் நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால் இது புளூ மூன் என அழைக்கப்படுகிறது.
நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு.
சந்திர கிரகணத்தின்போது சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின் மேல் படும். இதனால், சிவந்த நிலாவாக தோன்றும். இது பிளட் மூன் என்று அழைக்கப்படும் இரண்டாவது நிகழ்வாகும்.
150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இதே போல மூன்றாவது அரிய நிகழ்வு சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது.
பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒரு தடவை நிலா பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது, நிலா வழக்கத்தை விட பெரியதாக சூப்பர் மூனாக தோன்றும். அந்த அரிய நிகழ்வும் முழு சந்திர கிரகணத்தின் போதே நடக்கிறது.
இந்த நேரத்தில் வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாக நிலா காட்சி அளிப்பதோடு சற்று பிரகாசமாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.