குளூற்றன் ப்ரீ டயட் உணவு முறை!

எம்மில் ஒரு சிலருக்கு எம்மாதிரியான உணவுமுறையை பின்பற்றினாலும் அவர்களுக்கு ஒவ்வாமை மற்றும் ஜீரண கோளாறு இருந்துக்கொண்டேயிருக்கும். அவர்களின் உணவுமுறையைக் கண்காணித்தால் அவர்கள் புரதச்சத்து மிக்க உணவுகளை இயல்பிற்கு அதிகமாக சாப்பிடுவது தெரிய வரும்.புரதச்சத்து எம்முடைய இயக்கங்களுக்கும் தசைகளின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்று தான். ஆனால் ஒரு சிலருக்கு இது ஒவ்வாமை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு புரதத்தில் உள்ள குளூற்றன் என்ற கூட்டு வேதியல் பொருள் தான் காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் இத்தகைய பாதிப்புடையவர்களுக்கு குளூற்றன் ப்ரீ டயட் எனப்படும் உணவு முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில், குளூற்றன் என்ற சத்து பார்லி, கம்பு போன்றவற்றில் இயல்பாகவே அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதே சமயத்தில் ஒரு சிலருக்கு இந்த குளூற்றன் ப்ரீ டயட் உணவு முறை கூட பக்கவிளைவை ஏற்படுத்தலாம்.

எனவே, இத்தகைய உணவு முறையை பின்பற்றவேண்டும் என்றால் இரப்பை மற்றும் குடல் நோய் சிறப்பு சிகிச்சை நிபுணரை கலந்து ஆலோசித்த பின் தொடங்கவேண்டும். இத்தகைய ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் பெறாமல் இந்த உணவு முறையை பின்பற்றினால் நாட்பட்ட குடல் நோயின் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும்.

டொக்டர் சந்திரசேகரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்