உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் அரசியற் கட்சி ஒன்று புதுக்குடியிருப்பு இராணுவ வெற்றிவளாகத்திற்கு பொது மக்களை இன்றைய தினம் அழைத்துச் சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் பொதுமக்களை அங்கு அழைத்து சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் அந்தக்கட்சி ஈடுபட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு இறுதியுத்தின் போது விடுதலைப் புலிகளை இராணுவத்தினர் வெற்றிகொண்டுள்ளனர்.
அந்த வெற்றியை நினைவுபடுத்துவதற்கு புதுகுடியிருப்பு மந்துவில் பகுதியில் இராணுவ வெற்றி வாளாகம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்திருக்கின்றனர்.
எனினும், இந்த இராணுவ வெற்றி வளாகம் இன்று தேர்தல் பிரச்சார களமாக மாறியுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.









