இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் ஒரு சிறிய மலைப்பிரதேச மாநிலம்தான் நாகாலாந்து.
இயற்கை எழில் பூத்து குலுங்கும் இவ்விடத்தில் அமைந்துள்ள சில கிராமங்களில் வாழும் பழங்குடியினர் பகுதிகளுக்குள் நாம் அத்துமீறி நுழைந்தால் நமது தலை துண்டிக்கப்படுமாம்.
அங்காமி, ஆவோ, சாங்க், சிர், கியாம்னியங்கன், கோன்யாக், லியாங்க்மை, லோதா, மாகுரி, போச்சுரி, போம், பவ்மாய், ரெங்க்மா, ராங்மெய், சங்க்டம், சுமி, யும்சுங்க்கர், ஜீம் போன்ற பல் வகை பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வெளி உலகத்துடன் தொடர்பில்லாமல் அவர்களது பழங்கால பாரம்பரிய முறைப்படியே வாழ்ந்து வருகின்றனர்.

மான் மாவட்டத்திலிருக்கும் இடங்கள் அனைத்துமே இயற்கையுடன் இணைந்த பழங்குடியினர் கிராமங்களாகும்.
இந்த இடங்களில் நீங்கள் சுற்றுலா செல்ல தாராளமாக அனுமதிக்கப்படுவீர்கள். உங்களுக்கென உள்ளூர்வாசி ஒருவர் வழிகாட்டியாக வருவார். இங்கு செல்லும் நீங்கள் அவர்களின் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
வண்ணமயமாக இருப்பினும், வழக்கமான வசதிகள் இல்லை என்றாலும், இதைக் காண நிறையசுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
அங்கசாமி நாகர்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பு முக்கியமானதாகும்.



இவர்களின் கலைகளை ரசிப்பதற்கே இவர்களுக்கு தனி சுற்றுலா பிரியர்கள் வருகிறார்கள், மேலும் விவசாயத்தை தொழிலாகவும் கொண்டிருக்கிறார்கள்.
திருவிழாக்களின் போது சேவல் பலி கொடுக்கிறார்கள், முன்பு பல வருடங்களுக்கு முன்பு வரை மனிதர்களைத் தான் பலியிட்டு வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்படும்போது கொஞ்சம் பயத்தில் நம்மை பதறவைக்கிறது.
இதேபோன்று கோன்யாக் மக்கள் அன்புடன் பழகக்கூடியவர்களாம், ஆனால் அத்துமீறினால் தலையை துண்டாக்கிவிட்டு தான் மறுவேலை பார்ப்பார்களாம்.






