கிம் ஜாங் உன் குறித்து ஊடகங்களில் வந்த செய்தியால், குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெற இருந்த கலாசார விழாவில், தென் கொரியாவுடன் பங்கேற்க போவதில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.
அண்மைகாலமாக ஏவுகணை சோதனைகள் மூலம் உலகநாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா, தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தங்கள் நாட்டு அணி வீரர்களை அனுப்புவதற்கு பரீசிலித்து வருவதாகவும், இது குறித்து தென்கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் தயார் எனவும் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக வடகொரியா – தென்கொரியா எல்லையில் உள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் இரு நாட்டு உயரதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 550 பேர் கொண்ட குழுவை வடகொரியா அனுப்ப சம்மதம் தெரிவித்தது.
இந்த பேச்சு வார்த்தையால் கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் பதற்றம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின் இரண்டாவது முறையாக தென்கொரியாவுடனாக பேச்சு வார்த்தையை காரணமின்றி வடகொரியா ரத்து செய்தது.
இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெற இருந்த கலாசார விழாவில், தென் கொரியாவுடன் பங்கேற்க போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது.
இது குறித்து கிம் ஜாங் உன் கூறுகையில், என்னை தவறாக விமர்சித்து தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வருவதன் காரணமாகவே இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.