காதலனுக்கு நேர்ந்த சோகம்!

மகளின் காதலனை அவரின் தந்தை கழுத்தை வெட்டி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. கபில் யாதவ் என்ற நபருக்கு சுருதி என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் சுருதிக்கும், பிண்டு (18) என்ற இளைஞருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் இவர்களின் காதலுக்கு கபில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட, இரு தரப்பையும் விசாரித்த பொலிசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனாலும் சுருதியுடனான தொடர்பை பிண்டு நிறுத்தி கொள்ளவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கபிலை பொதுவெளியில் சந்தித்த பிண்டு, ஆமாம் நான் இன்னும் சுருதியோடு தொடர்பில் தான் இருக்கிறேன், உன்னால் என்ன செய்ய முடியும் என சவால் விட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கபில் பிண்டுவை பொது இடத்திலேயே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

இதனிடையில் சுருதியும், பிங்குவும் காதலிக்கவில்லை எனவும் அவர்களுக்குள் தவறான தொடர்பு மட்டுமே இருந்தது என ஊர்மக்கள் சிலர் கூறியுள்ளனர்.

இது குறித்தும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், கபிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினார்கள், இதில் நடந்த கல்வீச்சில் சில காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதோடு அங்கிருந்த வாகனங்களும் சூறையாடப்பட்டது.