அரசியல் தீர்வு? மீண்டும் மறக்கப்படுகின்றதா?

நல்­லாட்சி தேசிய அர­சாங்கம் அர­சி­யலில் கடும் நெருக்­க­டி­களை சந்­தித்­து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அர­சி­யலில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி அனைவர் மத்­தி­யிலும் மேலோங்­கி­யி­ருக்­கி­றது.

குறிப்­பாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி மற்றும் முறுகல் நிலை­யா­னது தொடர்ந்து வலு­வ­டைந்து வரு­கின்ற நிலையில் தேசிய அர­சாங்­கத்தின் இருப்­பா­னது சந்­தே­கத்­துக்­கி­ட­மா­கவே நீடித்து வரு­கின்­றது.

தற்­போ­தைய நிலை­மையில் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் எதிர்­வரும் 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள சூழலில் இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யி­லான போட்டி கடு­மை­யாக ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

இரண்டு பிர­தான கட்­சி­களும் தேர்தல் வாக்­கு­களை இலக்­கு­வைத்து ஒன்­றை­யொன்று கடு­மை­யாக விமர்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அதா­வது வாக்­கு­க­ளுக்­காக எந்த எல்லை வரைக்கும் செல்லலாம் என்ற எழுதப்­ப­டாத அர­சியல் நியா­யத்தின் அடிப்­ப­டையில் இரண்டு கட்­சி­களும் தற்­போது கடும் விமர்­ச­னங்­க­ளுடன் பிர­சா­ரப்­ப­ணி­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

இம்­முறைத் தேர்­தலில் மும்­மு­னைக்­க­ளப்­போட்டி நில­வு­வதால் பிர­சாரம் மேலும் சூடு­பி­டித்­துள்­ளது. குறிப்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­கட்சி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக்­கட்சி மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஆகிய கட்­சிகள் பிர­தா­ன­மாக இம்­முறை தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளன.

அந்­த­வ­கை­யி­லேயே தேர்தல் மிக தீவி­ர­மாக இம்­முறை சூடு­பி­டித்­தி­ருக்­கி­றது. மூன்று கட்­சி­களும் ஒன்­றை­யொன்று கடு­மை­யாக விமர்­சித்­த­வண்ணம் தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடு­பட்­டுள்­ளன.

அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மைய சில வாரங்­க­ளாக ஆற்­றி­வ­ரு­கின்ற உரை­களும் அர­சியல் களத்­திலும் தேர்தல் களத்தில் கடும் முக்­கி­யத்­து­வத்தைப் பெற்று வரு­கின்­றன.

அதா­வது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் பங்­கேற்­கின்ற அனைத்து பிர­சா­ரக்­கூட்­டங்­க­ளிலும் ஊழ­லுக்கு எதி­ராக கடு­மை­யான சொற்­பி­ர­யோ­கங்­களை பிர­யோ­கித்து வரு­கின்றார். குறிப்­பாக அண்­மையில் மட்­டக்­க­ளப்பில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கை­யி­லுள்ள அர­சி­யல்­வா­தி­களில் 50 வீத­மானோர் ஊழல்­வா­திகள் எனவும் மக்­களின் பணத்தை திரு­டு­கின்­ற­வர்கள் எனவும் குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

அது­மட்­டு­மன்றி ஊழல்­வா­திகள் தம்­மி­ட­மி­ருந்து எந்­த­வ­கை­யிலும் தப்­ப­மு­டி­யாது என்றும் ஊழல்­வா­திகள் அனை­வ­ருக்கும் எதி­ராக கடும் சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி கூறி­வ­ரு­கின்றார். அந்­த­வ­கையில் இவ்­வா­றான ஜனா­தி­ப­தியின் உரைகள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­டத்தில் விச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­னாலும் ஜனா­தி­ப­தியை விமர்­சிக்­க­வேண்டாம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளி­டத்தில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

ஏற்­க­னவே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பின்­வ­ரிசைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தியை கடு­மை­யாக விமர்­சித்த நிலையில் அது கடும் சர்ச்­சையை தோற்­று­வித்­தது.ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து வெளி­ந­டப்பு செய்யும் அள­விற்கு நிலைமை மோச­ம­டைந்­தி­ருந்­தது.

அதன்­பின்­னரே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளி­டத்தில் எக்­கா­ரணம் கொண்டும் ஜனா­தி­ப­தியை விமர்­சிக்க வேண்­டா­மென ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார். அந்த ஆலோ­ச­னையின் பிர­காரம் தற்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் எம்.பி.க்கள் எவரும் ஜனா­தி­ப­தியை விமர்­சிப்­பது இல்லை என்றே தெரி­கின்­றது.

ஆனால் ஜனா­தி­பதி ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யையும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வையும் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்றார். எக்­கா­ரணம் கொண்டும் ஊழல்­வா­தி­களை தப்­பி­வி­ட­மாட்டேன் என்றும் ஜனா­தி­பதி அடிக்­கடி கூறி­வ­ரு­கின்றார். இந்­த­நி­லையில் தேர்தல் சூழலில் இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் கடும் முரண்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளமை தெளி­வா­கின்­றது.

ஆனால் ஒரு­சிலர் இது தேர்தல் காலம் என்­பதால் இரண்டு தரப்­பி­னரும் வேண்­டு­மென்றே நடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர் என்ற கருத்தை முன்­வைத்து வரு­கின்­றனர்.

எனினும் தேர்தல் காலத்தில் இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் இவ்­வா­றான முரண்­பா­டுகள் ஏற்­பட்­டாலும் அவை இந்­த­ள­வு­தூரம் செல்­லுமா என்­பது சிந்­திக்­க­வேண்­டிய விட­ய­மாக உள்­ளது. காரணம் அந்­த­ள­விற்கு இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் அதி­க­ரித்து செல்­கின்­றன.

இங்கு இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் அதி­க­ரித்து செல்­கின்ற முரண்­பா­டு­களும் நெருக்­க­டி­களும் தமிழ் மக்­க­ளுக்­கான தேசிய பிரச்­சினை தீர்­வுக்­கான சந்­தர்ப்­பத்தை குறைத்­துக்­கொண்டு செல்­வ­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

பாம்பும் கீரிப்­பிள்­ளையும் போன்று சண்­டைப்­பி­டித்­துக்­கொண்­டி­ருக்கும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் கடந்த 2015ஆம் ஆண்டு ஒன்­றி­ணைந்து நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யதே தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட பல்­வேறு முக்­கிய விட­யங்­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­கா­க­வாகும்.

அதா­வது புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காணுதல், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்றி அமைத்தல், புதிய தேர்தல் முறை­மையை கொண்­டு­வரு­தல் ஆகிய மூன்று முக்­கிய விட­யங்­க­ளுக்­கா­கவே தேசிய அர­சாங்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

ஆனால் அவ்­வாறு முக்­கிய நோக்­கங்­க­ளுக்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட தேசிய அர­சாங்­க­மா­னது இன்று அந்த நோக்­கங்­க­ளி­லி­ருந்து விலகி செல்­கின்­றதா என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­கின்­றது. அந்த நோக்­கங்­க­ளி­லி­ருந்து இரண்டு கட்­சி­களும் விலகி செல்­கின்­றதா என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­வ­தற்கு அவர்­க­ளுக்­கி­டையில் அதி­க­ரித்து வரு­கின்ற நெருக்­க­டி­களும் முரண்­பா­டு­க­ளுமே கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன.

மிக முக்­கி­ய­மாக தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­கூ­டி­ய­வா­றான தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வுத்­திட்டம் கிடைக்­காமல் போய்­வி­டுமோ என்ற சந்­தேகம் மீண்டும் மக்கள் மத்­தியில் அதி­க­ரிக்க ஆரம்­பித்து விட்­டது.

2015ஆம் ஆண்டு தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதும் புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் என்ற நம்­பிக்கை மக்கள் மத்­தியில் மேலோங்­கி­யது.

ஆரம்­ப­கட்­டத்தில் அதற்­கான நகர்­வு­களும் நம்­பிக்­கைக்­கு­ரிய முறையில் எடுக்­கப்­பட்­டன. ஆனால் காலம் செல்­லச்­செல்ல நிலை­மையில் மாற்றம் ஏற்­பட்­டது. தற்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு கிட்­டுமா என்ற சந்­தே­கமே ஏற்­பட ஆரம்­பித்­து­விட்­டது.

நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்­தி­ருந்தால் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­ற­வா­றான தீர்­வுத்­திட்­டத்தை பெற முடியும் என எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்றார். அவரின் அந்த நம்­பிக்கை மீது மக்­களும் பாரிய நம்­பிக்கை வைத்­தி­ருந்­தனர். அது­மட்­டு­மன்றி தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் இந்த தீர்­வுத்­திட்டம் என்ற ஒரே கார­ணத்­திற்­காக பெரும்­பா­லான விட­யங்­களில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது.

குறிப்­பாக ஏனைய எதிர்க்­கட்­சி­க­ளினால் கடு­மை­யாக விமர்­சிக்கும் வகையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது. அவ்­வாறு ஆத­ரவு வழங்கி வரு­கின்ற நிலையில் எங்கே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் இந்தத் தீர்வு விவ­கா­ரத்தில் ஏமற்­றப்­பட்­டு­வி­டுமோ என்ற அச்சம் தற்­போது மக்கள் மத்­தியில் ஏற்­பட்டு வரு­கின்­றது.

தற்­போ­தைய இந்த இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டுகள் மற்றும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை பார்க்கும் போது அது இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் பாரிய பகையை உரு­வாக்­கி­விடும் சூழல் காணப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் பகை உரு­வா­கு­மி­டத்து அது தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தீர்­வுத்­திட்­டத்­தையே கடு­மை­யாக பாதிப்­ப­தாக அமையும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தீர்­வுத்­திட்ட விட­யத்தில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வார்கள் என்ற நம்­பிக்கை மக்­க­ளுக்கு காணப்­பட்­டது. அது­மட்­டு­மன்றி நீண்­ட­கா­லத்­திற்குப் பின்னர் இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைத்­ததால் அர­சியல் தீர்­வுக்­கான சந்­தர்ப்பம் அருகில் வந்­த­தா­கவே உண­ரப்­பட்­டது.

இந்த அரிய சந்­தர்ப்­பத்தில் தீர்வு காணா­விடின் அர­சியல் தீர்­வுக்­கான சந்­தர்ப்பம் மிகவும் தொலை­வி­லேயே இருக்கும் என கூறப்­பட்­டது. ஆனால் அந்த அரு­மை­யான சந்­தர்ப்­பத்­திலும் தற்­போது பயன்­பெ­றாத சூழல் உரு­வா­கி­வி­டுமோ என்ற அச்சம் ஏற்­பட ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டு­களும் நெருக்­க­டி­களும் குறை­வாக இருந்த சந்­தர்ப்­பத்தில் தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை மேலோங்கி காணப்­பட்­டது. ஆனால் தற்­போது இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் மேலோங்கி வரு­கின்ற நிலையில் தீர்­வுத்­திட்டம் என்­பது கானல்­நீ­ரா­கி­வி­டுமோ என்ற அச்சம் மக்கள் மத்­தியில் ஏற்­பட ஆரம்­பித்­து­விட்­டது.

ஆனால் இந்த நிலைமை நீடித்து செல்­லு­மாயின் அதா­வது இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள் தொடர்ந்து அதி­க­ரிக்­கு­மாயின் தீர்­வுக்­கான சந்­தர்ப்­ப­மா­னது குறை­வ­டைந்து செல்லும் என்­பதில் சந்­தே­க­மில்லை. இரண்டு பிர­தான கட்­சி­களும் இந்த நிலை­மையை உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். ஆட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் இது­வரை தீர்­வுத்­திட்டம் தொடர்பில் உறு­தி­யான நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு இடைக்­கால அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருந்­த­போதும் அது மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பிர­தி­ப­லிக்­கின்­றதா என்ற சந்­தேகம் பல்­வேறு தரப்­பி­னரால் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றது. அதில் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய சில விட­யங்கள் இருப்­ப­தா­கவே கூறப்­பட்­டது.

ஆனால் இரண்டு கட்­சி­களும் இணைந்து இருக்­கின்ற சூழ­லி­லேயே இந்த இடைக்­கால அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. அப்­படி இருந்­த­போ­திலும் இரண்டு கட்­சி­களும் இந்த இடைக்­கால அறிக்­கையில் கடு­மை­யாக முரண்­பட்­டு­கொண்­டன.

இந்­நி­லையில் தற்­போது இந்த பிர­தான இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பாடு அதி­க­ரித்து செல்­கின்ற நிலையில் எங்கே இந்த தீர்­வுத்­திட்ட விவ­கா­ரத்தில் தற்­போது இருக்­கின்ற இணக்­கப்­பா­டானது எதிர்­கா­லத்தில் இல்­லாமல் போய்­வி­டுமா என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக தீர்வுத் திட்டம் சாத்­தி­ய­மாக இருந்த சந்­தர்ப்­பத்­திலும் கூட இரண்டு கட்­சி­களும் முழு­மை­யாக இணக்­கப்­பாட்­டிற்கு வராத நிலையில் தற்­போது இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் பாரிய முரண்­பாடு அதி­க­ரித்­துள்ள நிலையில் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் கேள்­விக்­கு­றி­யா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன.

எவ்­வா­றெ­னினும் இந்த ஆட்­சிக்­கா­லத்­திற்­குள்ளே தீர்வை எப்­ப­டி­யா­வது பெற்­று­வி­ட­வேண்டும் என்­பதில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்றார். அதற்­கா­கவே பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் அவர் அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு அளித்து வரு­கின்றார்.

ஆனால் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனின் நம்­பிக்கை எந்­த­ளவு தூரம் சாத்­தி­ய­மாகும் என்­பது தற்­போது சந்­தே­கத்­திற்­கி­ட­மா­கி­றது. காரணம் வரலாற்றைப் போலவே பிரதான கட்சிகள் தற்போது தமது கைவரிசையை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளன.

அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

“” நாம் தீர்வுகள் வழங்கும் நகர்வுகளை ஆரம்பித்து முன்னெடுத்து சென்றுகொண்டுள்ளோம். அரசியல் அமைப்பு விவகாரத்தில் நாம் ஆரம்பித்த சில விடயங்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பின் மூலமாக சகல மக்களுக்கும் தீர்வுகளை பெற்றுத்தரும் முயற்சிகளை நான் முன்னெடுத்து வருகின்றேன்.

அவை பூர்த்திசெய்யப்பட வேண்டும். இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனநாயக ரீதியாக செயற்படும் முதல் சந்தர்ப்பம் என நான் கருதுகிறேன். விரைவில் நான் அரசியல் தீர்வை பெற்றுத் தருவேன் என்று பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரதமர் என்னதான் இவ்வாறு கூறினாலும் அரசியல் கள நிலைமைகள் அதற்கேற்ற வகையில் உருவாக்கப்படுகின்றதா என்பதே கேள்வியாகும். தற்போதைய இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளையும் நெருக்கடிகளையும் பார்க்கும்போது அரசியல் தீர்வு என்பது மீண்டும் மறக்கடிக்கப்படும் ஒரு விடயமாகவே இருந்து வருவதையே காண முடிகின்றது. அப்படியானால் புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்த நம்பிக்கை?

ரொபட் அன்­டனி