கோத்தபாயவை பாதுகாத்தது பிரதமர் ரணில் தான்!! – மைத்திரி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

maithiri-5555-800x450கோத்தபாயவைக் கைது செய்ய வேண்டாம் என்று தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது;

கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்வதற்குத் தேவையான ஆவணங்களை பொலிஸ்மா அதிபரிடம் சட்டமா அதிபர் வழங்கியிருந்தார். அதைப் பொலிஸ்மா அதிபர் என்னிடம் தெரிவித்தார்.அப்போது நான் பிரதமரைத் தொடர்பு கொண்டேன். அவர் அப்போது இந்தியாவில் இருந்தார். சட்டமா அதிபர் செய்த பரிந்துரைகளை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் அவரைப் பணித்தேன்.

இந்தக் கோவைகளை சட்டத்தரணி ஒருவருக்கு வழங்கி அதற்கேற்ற வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறே நான் சொன்னேன்.என்ன குற்றச்சாட்டுகள்? அவற்றின் அடிப்படை என்ன? என்பதைப் பார்க்க வேண்டுமல்லவா! ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. அப்படியே மூடி வைத்துவிட்டார்.இதில், என்னைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை என்றார் ஜனாதிபதி.