கொழும்பு நகரில் உலாவரும் ஆடம்பர வசதிகளை கொண்ட பேரூந்து!! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு?

இலங்கை போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள விசேட பேருந்து குறித்து புதுக்கடை நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.’தம் ரெஜின’ என அழைக்கப்படும் பேருந்து, அதன் நிறம் மற்றும் அதில் வழங்கப்படும் சிறப்பு வசதிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது.இந்த பேருந்து வலஸ்முல்ல – கொழும்பு வீதியின் இலக்கம் 3 இல் பயணங்களை மேற்கொண்டு வருகின்றது.எனினும், அதில் காணப்படும் அதிக வசதிகளை கருத்திற் கொண்டு பொலிஸாரினால் பேருந்து மீட்கப்பட்டது. அதீத வசதிகள் காரணமாக பயணிகளின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.பொலிஸாரின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட பேருந்து நீதிமன்றதின் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.பேருந்தில் காணப்படும் சிறப்பு வசதிகளை தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி, அதனை தற்காலிகமாக விடுவித்துள்ளார்.எனினும், பேருந்தில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் மற்றும் பல்வேறு நிறத்திலான கண்ணாடிகள், அதிகமான மின்குமிழ்கள், மின்சார வசதிகளை வழங்கும் ப்லக் பொயின்ட், தொலைக்காட்சி, கூல் போக்ஸ், உட்பட பல பொருட்களை அகற்ற வேண்டும்.அதன்பின்னர் புதுக்கடை நீதிமன்றத்தில் பேருந்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.