யாழில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.யாழ்.இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜன் தலைமையில், இந்தியாவின் 69 வது குடியரசு தின நிகழ்வுகள் யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது.இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜா அவர்கள் இந்திய தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியதுடன், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் குடியரசு தின செய்தியையும் அவர் வாசித்தார்.

அத்துடன் இந்திய பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் விதமான கலை கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது.சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் சர்வ மத தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.