இவுங்க எல்லோருமே குள்ளம் தான்..உன் வாய மூடு! தொகுப்பாளினிகளை ஓடவிட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வெளியாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

31-1464665427-suryad--600

படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருந்த வேளையில் பிரபல டிவி சேனலைச் சேர்ந்த இரண்டு தொகுப்பாளிகள் சூர்யாவை குள்ளன் என விமர்சனம் செய்திருந்தது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் இந்த தொகுப்பாளினிகளுக்கு எதிராக ஒட்டு மொத்த திரையுலகமும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர், இதனையடுத்து தற்போது சூர்யா ரசிகர்கள் அந்த தொகுப்பாளிகளுக்கு சரியான பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்துள்ளனர்.

அதாவது அப்துல் கலாம், சச்சின், எம்.ஜி.ஆர், ஹிட்லர், சார்லி சாப்ளின், அமீர் கான், கமல் ஹாசன், விளையாட்டு வீரர் மெச்சி, மைக் டைசன், ஜெயலலிதா என சாதனையாளர்கள் பலரும் குள்ளமானவர்கள் தான் என கூறியுள்ளனர்.