வாஷிங்டனை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்து 315 நாட்கள் Chipotle சிக்கன் உணவினை சாப்பிட்டு வந்ததன் மூலம் தனது உடல் மிகவும் கட்டுக்கோப்பாக இருப்பதாக கூறியுள்ளார். Chipotle என்ற உணவு ஐரோப்பிய நாட்டு மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் உணவு ஆகும். இது சிக்கன், காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. Devin Cunningham என்ற நபர், தொடர்ந்து 315 நாட்கள் இந்த உணவினை சாப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், சிக்கன் உணவு சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும் என்பது அனைவரின் கருத்து. ஆனால், நாம் எந்த ஒரு உணவினை எடுத்துக்கொண்டாலும், அதனை மகிழ்ச்சியாக சாப்பிட்டால் உடல்நலனில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
சிக்கன் அல்லது ஒரு கிண்ணம் Brown Rice சாப்பிடுவேன், black beans, fajita vegetables, pico, corn, மற்றும் lettuce ஆகியவையே எனது உணவாகும். சீஸ் வேண்டுமென்றால் அவ்வப்போது சாப்பிட்டுக்கொள்வேன்.
தினமும் மறக்காமல் Chipotle சாப்பிடுவேன். 315 நாட்கள் இதனை சாப்பிடும்போதும் எனது உடல்நலனின் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. எனது உடலானது, மிகவும் கட்டுக்கோப்பாக மாறியது என்று கூறி, தனது புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.