பத்து வினாடிகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதிசயம்! சொன்னா நம்பமாட்டீங்க!

பத்து வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்படாத ஒரு தொழில்நுட்பம் இன்று நமது அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. இப்படி ஒரு தொழில்நுட்பம் வருமா என நாம் அன்று யோசித்ததே இல்லை.

ஆனால், இன்று அது நம் வாழ்வின் ஒரு அங்கமாக… சாதாரண ஒன்றாக மாறியிருக்கிறது.

அப்படி அறிவியல் ஆய்வாளர்களால் கருதப்படும் வருங்கால தொழில்நுட்பங்கள் சிலவன பற்றி தான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம். இவை நம் வாழ்வியலை மட்டுமல்ல, உலகின் போக்கையும் கூட மாற்றியமைக்கலாம்….

ஈ-இன்க் டாட்டூ!

moodINQ எனப்படும் இந்த கருவி டாட்டூ உலகில் பெரும் புரட்சியாக இருக்கலாம். இதில் டிசைனை ஏற்றிவிட்டால் அது அச்சு பிசராமல் தெளிவாக நாம் விரும்பும் டிசைனை கொண்டு வந்துவிடும். இதை யார் வேண்டுமானாலும் பயனபடுத்தலாம்.

 

 625.0.560.370.180.700.770.800.668.160.89 (49)

சீல் வைக்கும் கருவி!

iTouch625.0.560.370.180.700.770.800.668.160.89 (50)less எனப்படும் இந்த கையடக்க கருவி நாம் பிரித்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகளை மீண்டும் சீல் செய்ய உதவும். இதனால் காற்று புகாமலும், சீக்கிரம் உணவு தரம் இழக்காமல் அல்லது கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.

 

டூத் பிரஷ்!

AmaBruch எனப்படும் இந்த பிரஷ்கள் நாம் இப்போது பயன்படுத்தும் பிரஷ்களை போல இருக்காது.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (51)

பத்து வினாடிகள் இதை வாயில் மாட்டிக் கொண்டால் போதும், அதுவே பற்களை மொத்தமாக சுத்தம் செய்துவிடும். இதை ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட் போனுடன் கனக்ட் செய்துக் கொள்ளலாம்.

 

நீரை ஒயினாக மாற்றும் கருவி!

வோக்டையில் (Vocktail) என கூறப்படும் கருவியை சிங்கப்பூர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிளாஸ் நாம் பருகும் / பானத்தின் நிறம் மற்றும் சுவையை மாற்றக் கூடியதாக அமைந்திருக்கிறது.

 

இந்த கிளாஸ் விர்சுவல் காக்டையில் எனும் மொபைல் செயலியுடன் இனைந்து செயற்படும். அதன் செட்டிங்க்ஸ் மூலம் கிளாஸ் உள்ளே இருக்கும் நீரை கண்ட்ரோல் செய்யலாம்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (52)

 

ஸ்மார்ட் கண்ணாடிகள்!

இந்த கண்ணாடிகள் மூலம் ஒருவரை அழைக்கலாம், பாடல்களை பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம்.

இது பயண வழிகாட்டியாகவும், கலோரிகள் எத்தனை கரைந்துள்ளன என்பதையும் கூட காட்டும். வயர்லஸ் சார்ஜிங் முறையில் இதை சார்ஜ் செய்துக் கொள்ளலாம். இது காண சாதாரண கண்ணாடி போன்ற அமைப்பு தான் கொண்டிருக்கும்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (53)

 

பான்கேக் பிரிண்டர்!

PancakeBot எனப்படும் இந்த கருவி எந்த வடிவத்திலும் பான்கேக் வடிவமைத்து கொடுக்கும். உங்களுக்கு பிடித்த கார்டூன் பாத்திரத்தில் இருந்து உலக அதிசயங்கள் வரை எந்த வடிவமாக இருந்தாலும், உங்களுக்கு பிடித்த பான்கேக்கை அந்த வடிவத்திலேயே ருசித்து சாப்பிடலாம்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (54)

 

கறைபடியாத ஷர்ட்!

Fooxmet எனப்படும் இந்த சட்டைகளில் எந்த பானம் கொட்டினாலும் அதன் கறைப்படியாது. ஆம்! இது ஆண்டி-ஸ்டைன் ரிபளண்ட் ஷர்ட். அடர்த்தியான திரவங்கள் கொட்டினாலும் கூட எளிதாக துடைத்துக் கொள்ளலாம்.

ஏதும் இந்த சட்டையில் ஒட்டிக் கொள்ளாது. இதன் ஒரே பிரச்சனை, கசங்கினால் அயர்ன் செய்வது கொஞ்சம் கடினம். அதற்கு மட்டும் நேரம் பிடிக்கும்.

 

 

எலக்ட்ரானிக் லக்கேஜ் பேக்!

Mu Ta எனும் இந்த லக்கேஜ் பேக் நிச்சயம் எதிர்காலத்தில் பெரும் பங்கு வகிக்கும். இது ஒரு எலக்ட்ரானிக் பேக். எல்லா பேக் போலவும், ஆவணங்கள், பொருட்கள் வைத்துக் கொள்ள அமைப்புகள் இருக்கும் இது போக இதில் ஒரு சென்சார் இருக்கும்.

அதன் மூலம் யாரேனும் இந்த பேகை திருடிக் கொண்டு சென்றால் அவர்களை எளிதாக ட்ரேஸ் செய்து பிடித்துவிடலாம்.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (55)

 

காது சுத்தம் செய்யும் கருவி!

EarScope எனப்படும் இந்த கருவி காதில் இருக்கும் அழுக்கு எனப்படும் மெழுகு போன்ற திரவத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இதன் ஒரு முனையில் ஒரு பிரஷ் போன்ற வயர் இருக்கும்.

இன்னொரு முனையில் வட்டமான ஸ்க்ரீன் இருக்கும். மேலும், இதனுள் இணைக்கப்பட்டிருக்கும் எல்.ஈ.டி விளக்கின் வெளிச்சம் கொண்டு காதினை முற்றிலுமாக சுத்தம் செய்யலாம். (எதுக்கு!?) உண்மையில், காதினை வெளிப்புறமாக சுத்தம் செய்தால் மட்டும் போதுமானது.

 

நாம் அழுக்கு என நினைக்கும் அந்த அடர்த்தியான திரவம் தான் உண்மையில் நமது காதுகளை காப்பாற்றுகிறது.

625.0.560.370.180.700.770.800.668.160.89 (56)