தமிழக அரசின் 2017ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வரும் நிலையில் 2017-ம் ஆண்டிற்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இதன்படி பெரியார் விருது இலக்கிய வளர்ச்சிக்கு அன்றாடம் உழைத்து பெரும் தொண்டாற்றி பெருமை சேர்த்தமைக்காக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விருது வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து கிண்டல் செய்து வரும் நெட்டிசன்கள், பெரியாரை இதைவிட கேவலப்படுத்தமுடியாது என்று கிண்டலடித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நேர்காணலின் போது நேரலையில் சிக்கிக்கொண்டு மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் வளர்மதி மன்றாடிய விதம் காண்போரை எல்லாம் பரிதாப பட செய்தது.
எங்கே ஆதாரம் காட்டுங்கள் பார்க்கலாம் என்று வளர்மதி கேட்டவுடன், நெறியாளர் மொபைலை எடுத்து நீட்டிய உடனே பேசும் விதம் இருக்கிறதே.
அடடா தமிழகத்திற்கு இப்படியொரு அறிவான அமைச்சர் கிடைதிருக்கிறாரா என்று யோசிக்க வைக்க தோன்றுகிறது.
நீங்களே இந்த வீடியோவை பார்த்து உள்ளதை தெரிந்து கொள்ளுங்கள்.






