‘கிங்’ கோலியை ஒருநாள் அரங்கில் ஓரங்கட்டிய ஜோ ரூட்!

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தனது 100வது போட்டியில் பங்கேற்ற ஜோ ரூட் புதிய மைல்கல்லை எட்டினார்.

joe-root-ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வென்றது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, சிட்னியில் நடக்கிறது. இதில் ’டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

கோலி பின்னடைவு:

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு , தனது 100வது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற ஜோ ரூட் 27 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 100 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலியை (4107 ரன்கள்) பின்னுக்கு தள்ளி ஜோ ரூட் (4164 ரன்கள்) நான்காவது இடம் பிடித்தார்.

அசைக்க முடியாத ஆம்லா:
இப்பட்டியலில் தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா (4808 ரன்கள்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (4277 ரன்கள்), வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்டன் கீரிண்ட்ஜ் (4177 ரன்கள்) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.