எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார் உடன்குடி மின் உற்பத்திக்கு!

உடன்குடி மின் உற்பத்தித் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ஆம் தேதி அடிக்கல் நாட்டுவார் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

CaptureVCஉடன்குடி மின் உற்பத்தித் திட்டம் ரூ.10,000 கோடி மதிப்பில் தொடங்குகிறது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு மத்திய அரசு உதவியையும் பெற்றுள்ளது. இத்திட்டப்பணிகள் தொடங்கிய அடுத்த 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

இத்திட்டதிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வரும் ஜனவரி 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

உடன்குடி மின் உற்பத்தித் திட்டம் செயல்படும்போது அதன் மூலம் 1230 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.