திருமணத்திற்கு முன்பு ஆணுடன் நெருக்கம்: தண்டனை!

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்னர் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிற்கு, பொதுமக்கள் முன்னிலையில் 20 பிரம்படிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்பு உறவில் ஈடுபடுவது குற்றமாகும், இந்த குற்றத்திற்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை அளிக்கப்படும்.

இந்நிலையில், திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், பெண்ணொருவர் தனது ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக இருந்துள்ளார்.

இந்த விடயம் தெரிய வந்ததால், Banda Aceh என்னும் இடத்தில், Sharia சட்டத்தின்படி பொதுமக்கள் முன்னிலையில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டது.

அதன் மேல், சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரின் ஆண் நண்பருக்கு தலா 20 பிரம்படிகள் தண்டனையாக அளிக்கப்பட்டன.

இதே போல கிறித்துவர் ஒருவருக்கு மது விற்பனை செய்ததற்காக 36 பிரம்படிகள் அளிக்கப்பட்டன. முன்னதாக, ஒவ்வொரு 10 பிரம்படிக்கும் ஒருமுறை, தண்டனைக்குரிய நபரை மருத்துவர் ஒருவர் சோதனை செய்வார்.

இந்த தண்டனைகள் மூலம் இஸ்லாமிய சட்டத்தை நிலைநாட்டுவது அரசின் கடமை என்று Banda Aceh நகரின் மேயர் அமினுல்லா உஸ்மான் தெரிவித்துள்ளார்.