ஏழை எளிய மாணவர்கள், இனி மருத்துவம் படிக்க முடியாது.!! நீட்டை தொடர்ந்து புதிய கட்டுப்பாடு..!

இந்தியாவில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டுக் கொண்டே போகின்றன.

large_th-4-5747

கிராமப்புற ஏழை-எளிய நடுத்தர குடும்பத்து மாணவ- மாணவியர், மருத்துவர் படிப்பைநினைத்துக் கூட பார்க்க முடியாது என்றஅளவிற்கு நிலைமை படு மோசமாக மாறிகொண்டே இருக்கிறது

 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு,12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்பெற்றால் மட்டும் போதாது,

தேசிய அளவில்நடத்தப்படும் தகுதி மற்றும் நுழைவுத்தேர்விலும் (நீட்) வெற்றிபெற வேண்டும் என்று விதிகொண்டுவரப்பட்டு உள்ளது.

 

எனினும், மருத்துவக் கல்வியை வியாபாரமாக்கும் நடவடிக்கைகளை இந்திய மருத்துவக் கழகம் நிறுத்திக் கொண்ட பாடில்லை

தற்போது, புதிய விதி ஒன்றை அறிவித்துள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தின் கூட்டம் நடைபெற்ற பின்னணியில், அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதியின்படி, தொலைதூரக் கல்வி மூலம் 12 ஆம் வகுப்பு படிப்பவர்கள் மருத்துவக் கல்வியில் சேரமுடியாது என்று கூறப்பட்டுள்ளது.

திறந்தவெளி கல்வி நிறுவனங்கள் மூலம் படித்தவர்களும் மருத்துவம் பயில முடியாது என்றுமருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.

காரணம்..?

வழக்கம்போலத்தான், மருத்துவ மாணவர்களின் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் மருத்துவக் கழகம் கூறியுள்ளது