திருமணம் அவசியமல்ல: பலருடன் சேர்ந்து வாழலாம்…இந்தியாவில் உள்ள விசித்திர கிராமம்!

வெளி நாடுகளில் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் முறை உள்ளது. அதனை., லிவிங் டு கெதர் முறை என்று கூறுவார்கள்.

hqdefault (1)

ஆனால்., இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த கிராமம் எங்கு உள்ளது தெரியுமா..? ராஜஸ்தான் மாநிலத்தில்தான் அந்த விசித்திர கிராமம் உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரிசியா என்ற பழங்குடி மக்கள் தான் இந்த விநோத முறையை பின்பற்றி வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ளவர்கள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும்., யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம்.

இந்த கிராமத்தில் மணமகன் வீட்டார்தான் சீர் கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தாலும் சரி., திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தாலும் சரி. கொடுக்க வேண்டிய சீரை சரியாக கொடுத்துவிட வேண்டுமாம்.

சேர்ந்து வாழும் துணைகளுக்கு ஒரு நிபந்தனை வைக்கப்படுகிறது. அவர்கள் கண்டிப்பாக குழந்தை பெற்று கொள்ள வேண்டும்.

அப்படி அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் வேறொரு துணையை தேர்வு செய்து கொள்ள வேண்டுமாம். இந்த முறை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது.

சரி, பழங்குடியினரின் கலாச்சாரம்தான் அப்படி இருக்கிறது என்றால்., அதை விட மிகவும் மோசமான கலாச்சாரத்தை., நாட்டில் உள்ள இளம் தலைமுறையினர் பின்பற்றுகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.