நான்கு நாட்களா..? தேசிய பண்டிகையாக அறிவித்து, அந்நாட்டவர்களும் தமிழர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர்..!

இருந்தும்தீபாவளி, பொங்கல் உள்ளி்ட்ட பண்டிகைகளை கொண்டாட வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மறப்பதும் இல்லை, மறுத்ததும் இல்லை..

ஆப்பிரிக்காவில் அதிகளவில் தமிழர்கள் இருப்பதால் இங்கு பொங்கல் பிரபலம், அதுமட்டுமின்றி 250க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இங்கு உள்ளன. இதனால் பொங்கல் விழா ஆப்பிரிக்காவில் தேசிய பண்டிக்கையாக கொண்டாடப்படுகின்றது.

பொங்கல் கொண்டாட்டங்களின் போது, தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழர்களுடன், ஆப்பிரிக்க மக்கள் சேர்ந்து கொள்கின்றனர்.

ஜெர்மனியில் பொங்கல் பண்டிகை 4 நாட்களாக கொண்டாடப்படுகின்றது.

தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாறைசாற்றும் எண்ணற்ற இந்து கோவில்கள் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளன. இங்கு கடைபிடிப்பது போலவே பூஜைகள், அங்கும் உண்டு..

ஆஸ்திரேலியாவில் 10க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் உள்ள நிலையிலும், தமிழ் கலாச்சார முறையில் இங்கு பொங்கல் கொண்டாடப்படுவதில்லை.

நியூஸ்லாந்தில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் பண்பாட்டை எடுத்துரைக்கும் பொங்கல் போன்ற பண்டிகைகள் இங்கு வெகுவாக கொண்டாடபடுகிறது..

அமெரிக்காவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதால், இதனால் அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்களில், தமிழகத்தை போலவே பொங்கல் வைத்து கொண்டாடப்படுகின்றது.

கனடாவில் உள்ள தமிழர்களும், பொங்கலை முன்னிட்டு, இனிப்புகள் வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர்.