தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த திங்கள் கிழமை அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபையில் மூன்றாவது நாளான இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய பெருந்துறை சட்டமன்ற அ.தி.மு.க உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் கூறுகையில், தங்களது தொகுதிக்குட்பட்ட விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
உடனே அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதேபகுதிக்கு அருகில் ஏற்கனவே 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த தேவையில்லை என்று கூறினார்.
அதனையடுத்து அமைச்சருக்கு பதில் கருத்து தெரிவித்த தோப்பு வெங்கடாசலம், எப்போதும் புள்ளி விவரங்களை சட்டப்பேரவையில் பேசும் சுகாதாரத்துறை அமைச்சரின் தற்போதைய பதில் திருப்தி தரவில்லை என்றார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அமைச்சரின் இத்தகைய பேச்சை விமர்ச்சித்த தோப்பு வெங்கடாச்சலம், டிடிவி.தினகரனின் ஆதரவாளர் போல் நடந்துகொள்வதாக அ.தி.மு.க எம்எல்ஏக்களுக்குள் பேச்சு அடிபடுகிறது.
ஓ., இவர்தான் அந்த ஸ்லீப்பர் செல்லா என்ற வசனமும் சட்டசபையில் கேட்டதாக்க கூறப்படுகிறது.