மனைவியும், தங்கையும் கற்பழிப்பு! இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ தமிழகத்தில்..?

பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரம் ஒன்றை கடந்த வருடம் டிசம்பர் 27-ம் தேதி வெளியிட்டது.

large_rapeinchennai-5408டெல்லி, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா, சென்னை உட்பட 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விபரங்கள் இருந்தன.

இதில், பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ள நகரமாக சென்னை முதல் இடத்தை பிடித்திருந்தது.

சென்னையில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் 544 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சம் பெண்களில் 15 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் ஒரு குற்ற சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

நேற்று சென்னை வியாசர்பாடி திடீர் நகரில் ஒருவரது கழுத்தில் ரவுடிகள் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.

பின்னர் அந்த நபரின் மனைவி மற்றும் தங்கையை ரவுடிகள் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதில் ஈடுபட்ட நான்கு ரவுடிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. போற்றுதலுக்குரிய பிறப்பாக கருதவேண்டிய பெண்கள் கேலி, கிண்டல், பாலியல் வன்கொடுமை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

வெளியில் மட்டும் அல்ல குடும்பத்துக்குள்ளேயும் பல்வேறு எதிர் வினைகளை எதிர்கொள்கின்றனர். அதுவும் பணிக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

அலுவலகத்துக்குள்ளேயும் வெளியேயும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலை என்று மாறப்போகிறதோ.