கடும் மழையால் நிலச்சரிவு: 13 பேர் பலி கலிஃபோர்னியாவில்!!!

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு நிகழ்ந்த நிலச்சரிவில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

163 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிழக்கு சாண்டா பார்பராவில் உள்ள ரோமியோ கன்யோனில் 300 பேர் வரையிலான ஒரு குழு சிக்கியிருப்பதாக கூறப்படுறது.

அமெரிக்கா

நிலச்சரிவு நிகழ்ந்த இடம் ”முதலாம் உலகப்போரின் போர்க்களம் போல தோற்றமளிக்கிறது” என போலீஸர் கூறுகின்றனர். .

மழை மற்றும் வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 50க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.

Capturejyg yjbகடும் மழையிலான மோண்டிசிட்டோவில் இடுப்பளவு சேற்றுநீர் உள்ளது என தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

சிறிய காரின் அளவுடைய பாறைகள் மலையில் இருந்து உருண்டு வந்து சாலைகளை மறித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் குக் கூறுகிறார்.

அமெரிக்கா

வீட்டின் இடிபாடுகளில் பல மணி நேரமாகச் சிக்கிக்கொண்டிருந்த 14 வயதான ஒரு சிறுமியை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

மீட்பு பணிக்கு உதவுவதற்காகப் பல விமானங்களை அமெரிக்காவின் கடலோர காவல்படை அனுப்பியுள்ளது.

_99531902_c1fc97db-407e-4236-b041-7e07d91d1061