புர்கா, கறுப்புக் கண்ணாடி, முகத்தை மறைக்கும் ஆடை: வாக்களிப்பு நிலையத்தில் தடை!

108_28082017_SSK_CMYமுகத்தை மறைக்கும் ஆடைகள், மற்றும் பொருட்களை அணிந்து கொண்டு வாக்காளர்கள் எவரும் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கச் செல்பவர்கள், புர்கா, கறுப்புக்கண்ணாடிகள், தலைக்கவசம், தொப்பி மற்றும் முகத்தை மறைக்கும் துணிகளை அணிந்திருக்கக் கூடாது.

முகத்தை மறைக்கும் இவ்வாறானவற்றை அணிந்து கொண்டு வாக்களிக்கச் செல்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

வாக்களிப்பின் போது அடையாளத்தை தெளிவாக நிருபிப்பது முக்கியம். எனவே அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.