இணையத்தில் மகளின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட தாயார்: கடும் கண்டனம்!!

இளம் தாயார் ஒருவர் தமது இரண்டு வயது மகள் கடற்கரையில் நிர்வாணமாக விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டதால் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பொதுவாக இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் இனிமையான தருணங்களை புகைப்படமாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுவது தற்போதெல்லாம் வாடிக்கை.

ஆனால் குறித்த புகைப்படங்களுக்கு இனம் சார்ந்தும் கண்டனத்துக்குரிய கருத்துக்களையும் பொதுமக்கள் பதிவிடுவது பல நேரங்களில் பதிவிட்டவருக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கும்.

அந்தவகையில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தமது 2 வயது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிந்ததால் இனவாத ரீதியான கருத்துக்களுக்கு இரையாகியுள்ளார்.

Jordan Lee Jones என்ற இளம் தாயார் தமது குழந்தைகளுடன் கடற்கறையில் பொழுதைக்கழிக்கும் தருணங்களை புகைப்படமாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வந்துள்ளார்.

 

 

இதில் தமது 2 வயது பெண் குழந்தையின் நிர்வாண புகைப்படத்தையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால் குறித்த புகைப்படத்திற்கு எதிராக அதிக கண்டனம் எழுந்ததால் தொடர்புடைய இணையதளமானது புகைப்படத்தை தங்கள் விதிகளுக்கு புறம்பானது எனக் கூறி நீக்கியுள்ளது.

உண்மையில் சிறுமியின் புகைப்படம் நிர்வாணமாக உள்ளது என இன்ஸ்டாகிராம் நீக்கவில்லை. மாறாக அந்தச் சிறுமியின் உடல் நிறமே காரணம் என அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த புகைப்படத்திற்கு கிடைக்கப்பெற்ற முதல் கருத்தே, உங்கள் மகளின் கருமை நிறம் பார்க்க அருவருப்பாக உள்ளது suncream குறித்து கேள்வி பட்டிருக்கிறீர்களா? என்பதே.

இன்னொருவர், 4 வயதில் 40 வயதுக்குரிய தோற்றத்தை உங்கள் குழந்தை பெறுவதற்குள் ஏதாவது செய்யுங்கள், என்ன கொடுமையான தாயார் நீங்கள்.

ஆனால் இதை எதையும் கருத்தில் கொள்ளாத Jordan Lee Jones நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன், போலித்தனத்தை வெறுக்கிறேன் என பதிவிட்டுள்ளார். மட்டுமின்றி தமது மகளின் எஞ்சிய புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.