மீண்டும் சங்கீதக் கதிரையில் மத்தியூஸ்!!

இலங்கை அணிக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணித் தலைவராக மத்யூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அணியின் தலைவராக இருந்த மத்யூஸ் கடந்த ஆண்டு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு ஒருநாள் அணித் தலைவர்களாக உபுல் தரங்க, திசாரா பெரேரா, தினேஷ் சண்டிமால், லசித் மலிங்கா, மற்றும் சமர கபுகேத்ரா ஆகியோர் செயல்பட்டனர்.கப்டன்களை மாற்றினாலும், இலங்கை அணி தொடர்ந்து தடுமாறியே வருகிறது. இந்நிலையில் இலங்கை அணிக்கு புதிய தலைவர் யார் என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த போட்டியில் இலங்கை டெஸ் அணி தலைவரான தினேஷ் சண்டிமால் மற்றும் மத்யூசின் பெயர்களே அடிபட்டது.அந்த வகையில் இலங்கை அணிக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மத்யூஸ் தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அணித் தலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . கப்டன்பதவியை ராஜினாமா செய்த மத்யூசுக்கு மீண்டும் அணியின் கப்டன் பதவி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்தாண்டு ஜூன் மாதம் இலங்கைக்கான சுற்றுலாவை மேற்கொண்ட சிம்பாவே அணியுடனான தொடரை 2-3 என்று சொந்த மண்ணில் பறிகொடுத்த வேதனை காரணமாக, மத்தியூஸ் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.