நன்றி சொல்ல வந்த ஜப்பானியர்!! உலகில் இப்படியும் ஒருவரா?

ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிய தமிழக மருத்துவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.ஜப்பானில் ஆசிரியராக பணியாற்றி வந்த இஷோவா, கடந்த ஆண்டு தமிழகத்துக்குச் சுற்றுலா வந்திருந்தார்.திருச்சி பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த அவர் ஸ்ரீரங்கத்தில் பேருந்தில் ஏறினார். அப்போது, தவறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நினைவுத் தப்பியது.இதைப் பார்த்த செய்தியாளர்கள் இருவர் இஷோவாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.திருச்சி அரசு மருத்துவமனையில் 20 நாள்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செய்தியாளர்களும் அவரின் நண்பர்களும் இஷோவாவை அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றனர். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால், ஷோவா உயிர் பிழைத்துக் கொண்டார்.அவருக்கு நினைவும் திரும்பியது. எனினும், அவரால் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூற இயலவில்லை.இந்த நிலையில், மருத்துமனை நிர்வாகத்தினர் ஜப்பான் துதரகத்தை அணுகி, இஷோவாவை தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.தாய்நாட்டில் சிகிச்சை பெற்ற அவர் முற்றிலும் குணமடைந்தார்.இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு வந்த அவர், திருச்சியில் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களையும் அரசு மருத்துவமனை டீன் அனிதாவையும் சந்தித்து நன்றி கூறினார். தன்னை காப்பற்ற உதவிய செய்தியாளர்களையும் நேரில் சந்தித்து இஷோவா நன்றி தெரிவித்தார்.தன் உயிரைக் காப்பற்றியவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காக ஜப்பானில் இருந்து வருகை தந்த இஷோவாவின் பண்பு சுற்றியிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் கலியுகத்தில் வாழும் மனிதர்கள் மத்தியில் இவ்வாறான நன்றி மறக்காத நல்ல உள்ளங்களும் வாழ்வது மனதிற்கு நிம்மதி தருகின்றது. தன்னுயிர் காத்த மருத்துவமனைக்கு நன்றி கூற நாடு விட்டு நாடு வந்த ஜப்பானியரின் உயர்ந்த குணத்தை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர் .