பிள்ளைகள் செய்யும் கைமாறு இதுதானா? (முகநூலில் இருந்து)

யாழ். சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான 70 வயது முதியவரொருவர் பராமரிக்க யாருமின்றித் தனித்து விடப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த முதியவர் உடற்பிணி காரணமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில் உறங்கிய சம்பவம் இன்று(08) பதிவாகியுள்ளது.

timthumbதனது மூன்று பிள்ளைகள் வெளிநாட்டிலும், இரு பிள்ளைகள் உள்நாட்டிலும் வாழ்ந்து வருவதாகவும், மனைவி காலமாகி விட்டதாகவும் குறித்த முதியவர் தெரிவித்தார்.

தொழில் நிமிர்த்தம் வெளியே சென்று விட்டு அந்த வழியே வந்து கொண்டிருந்த போது குறித்த முதியவரின் அவலநிலையைக் கண்ணுற்றேன். நான் இந்த அவல நிலையைக் கண்ணுற்ற போது உடல் அசதியால் குறித்த முதியவர் வீதியின் சற்று ஓரமாக உறங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை எழுப்பி அவருடைய அவல நிலையைக் கேட்டு அறிந்ததுடன் என்னால் இயன்ற சிறு உதவியும் செய்தேன்.

பிள்ளைகளுக்கு மனச்சாட்சியே இல்லையா?, நெற்றி வியர்வை சிந்தி பல தியாகங்கள் செய்து வளர்த்தெடுத்து ஆளாக்கிவிட்ட தம் தந்தைக்குப் பிள்ளைகள் செய்யும் கைமாறு இதுதானா?, நெஞ்சு பொறுக்குதில்லையே.