மகள் தொடர்பில் தந்தை வெளியிட்ட தகவல்…..

அமெரிக்காவில் அதிக போதை மருந்து பயன்பாட்டால் மரணமடைந்த தமது மகளுக்கு தந்தை ஒருவர் உருக்கமான செய்தியுடன் பிரியாவிடை அளித்துள்ளார்.

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் குடியிருந்துவரும் டிம் ஷெர்மன் என்பவரே தமது மகளுக்கு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தவர்.

கடந்த ஓராண்டாக போதை மருந்து பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு இருந்த தமது மகள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தைய நாள் கொண்டாட்டத்தின்போது அதிக போதை மருந்து காரணமாக உயிர் பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

சம்பவத்தன்று பொலிசாரிடம் இருந்து வந்த அந்த அழைப்பு தம்மை சுக்கலாக நொறுக்கியது எனக் கூறும் டிம் ஷெர்மன்,

தமது மகளை போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுவிக்க தாம் மேற்கொண்ட நடவடிக்கை படிப்படியாக பலன் அளித்தது எனவும், அதன் பின்னர் தமது மகள் தம்மிடம் உறுதி அளித்ததையும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

 

 

சம்பவத்தன்று தமது மகளிடம் இருந்து எந்த தொலைப்பேசி அழைப்பும் வராதது கண்டு குழப்பத்தில் இருந்ததாகவும்,

அதிக போதை மருந்து உட்கொண்டதால் தான் அவர் தம்மை தொடர்பு கொள்ளாமல் விட்டுள்ளது தற்போது உறுதியானது என்றார்.

பொலிசார் தம்மிடம் தெரிவித்த தகவலைக் கேட்டு தாம் சிறு பிள்ளை போன்று அழுததாக கூறும் டிம் ஷெர்மன்,

தமது மகளின் உயிரற்ற உடலை காண பொறுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி தமது மகளின் உடலில் உயிர் கொல்லும் நச்சுப் பொடியின் அம்சம் படர்ந்திருக்கலாம் என்பதால் பொலிசார் தமது மகளின் உடலை தொட்டுக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்றார்.

தமது மகளின் பிரிவு என்பது தம்மை நிலைகுலைய செய்துள்ளது என கூறும் டிம் ஷெர்மன், இதுபோன்ற ஒரு நிலையை பொதுமக்களில் சிலரேனும் கடந்து வந்திருக்கலாம் ஆனால் இது தம்மால் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு மேலானது என்றார்.