சாவகச்சேரி புத்தூர் வீதி மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (28) இரவு 9:40 மணியளவில் சம்பவித்துள்ளது. இரு இளைஞா்களும் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவந்த போது வேலுப்பிள்ளை சனசமூக நிலையத்திற்கு முன்னால் வேலியுடன் மோதி படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மட்டுவில் பகுதியை சேர்ந்த கே.காருசன் (வயது 17) எஸ் சர்மிலன் வயது 19 என்ற இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.