சிறைகளில் 1382 சிறைக்கைதிகள் மரணம்;நிதி உதவி வழங்க ஏற்பாடு!

சிறைகளில் கைதிகள் மரணமடைவது குறித்து மேன்முறையீட்டு நீதி மன்றால் தொடரப்பட்ட வழக்கில் 1382 கைதிகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

201609110550197673_Prison-to-indian-origin-woman-for-girl-torture-in-US_SECVPFஇதனடிப்படையில் சிறையில் மரணமடையும் கைதிகள் குறித்து அறிவதற்காக மேன்முறையீட்டு நீதி மன்றம் கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி உச்ச நீதி மன்றங்கள் தாமாகவே முன்வந்து வழக்குகளை பதிவு செய்து அறிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.மேலும் சிறைகளில் கைதானவர்கள் குறித்த விபரங்களும்,அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகள் குறித்தும் அறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் உள்ள 16 உச்ச நீதி மன்றங்கள் இவை குறித்த நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாகவும்,இதுவரை 8 உச்ச நீதிமன்றங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி 1382 கைதிகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் ஏனைய நீதிமன்றங்களும் விரைவில் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதைவிட நிதி உதவி கிடைக்காதவர்களின் குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.