ஆப்கானின் தலைநகரில் இன்று(28) இடம்பெற்ற இருவேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்சி சுமார் 46 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் வரை காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
முன்னதாக காபுலிள்ள ஷஆப்கன் வாய்ஸ் என்ற இடத்தில் 10.30 மணியளவில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தில் 6 பேர் பலியானகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
அடுத்ததாக, புலே சோக்ஹிடியா பகுதியிலுள்ள ஷயைட்தாபயன காலசார மையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 40 பேர் பலியாகியுள்ளனர். 30பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடைபெற்ற தாபயன் காலாசார மையத்தில் சோவியத் படையெடுப்பின் 38ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் இடம்பெற ஏற்பாடகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






