பரிசுத் தொகையை இப்படி பயன்படுத்திவிட்டாரா? அதிர்ச்சி தகவல்!!

bigg-boss-aaravதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த வருடம் ரசிகர்களிடம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது BiggBoss. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சிக்கு சில பிரபலங்களும், அமைப்புகளும் எதிர்ப்புகாட்டி வந்தனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சில பேருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. BiggBoss டைட்டிலை வென்ற ஆரவ் கூட இப்போது நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளார். இவர் அண்மையில் நிகழ்ச்சியில் வென்ற பணத்தை என்ன செய்தேன் என்று பேசியுள்ளார்.

அதில் அவர், அந்த பணத்தை வைத்து திருநெல்வேலியில ஒரு என்.ஜி.ஓ தொடங்கியிருக்கேன். தமிழ்நாட்டில் எந்தவொரு தேவை இருந்தாலும் இந்த என்.ஜி.ஓ அந்த இடத்துல உள்ள மக்களுக்கு உதவி செய்யும். ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுறதுதான் இந்த அமைப்போட நோக்கம். மதம், இனம், மொழி கடந்து இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்ற குறிக்கோள் வைத்திருக்கோம் என்றார்.