ஜெ.வின் அரசியல் வாரிசு தினகரன்!

20-1458452901-thangatamilselvan-1-600கடந்த 21 ஆம் தேதி நடத்தப்பட்ட சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையானது நேற்று சென்னை ராணி மேரி கல்லூரியில் நடத்தப்பட்டது. 19 சுற்றுகளாக நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 89,013 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை விட சுமார் 40707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் தினகரன்.

ஜெ.வின் அரசியல் வாரிசு தினகரன் ; திருமாவுக்கு தங்க.தமிழ்ச்செல்வன் நன்றி.!

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவு குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்த விசிக தலைவர் திருமா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அரசியல் வாரிசு தினகரன் தான் என்பதனை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தினகரன் குறித்த திருமாவின் கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் தினகரன் ஆதாரவாளரும், தகுதி நீக்கத்திற்கு ஆளாகியுள்ள எம்எல்ஏவுமான தங்க.தமிழ்ச்செல்வன்.