சிறிது நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற குஜராத் தேர்தலில் தோற்றாலும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருவார் என்று சிவசேனா மீண்டும் புகழாராம் சூட்டியுள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரதமர் மோடிக்கும் ராகுல்காந்திக்கும் இடையே நடைபெற்ற போட்டி என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவினாலும் பாரதிய ஜனதா கட்சி தோல்வி பயத்தில் அரண்டு போக வைத்த ராகுலின் பிரச்சாரம் பாராட்டிற்குரியது என்று சிவசேனா புகழராம் சுட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி புதிய தலைவர் அக்கட்சியை தோல்வியில் இருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என்பது சிவசேனாவின் கருத்து. பாஜகாவை மறைமுகமாக சாடியுள்ள சிவசேனா 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளது. சிவசேனாவின் கருத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தற்போது மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவுடன் வெகுநாட்களாக சிவசேனா கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.






