கடந்த 21 ஆம் தேதி நடத்தப்பட்ட சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையானது நேற்று சென்னை ராணி மேரி கல்லூரியில் நடத்தப்பட்டது. 19 சுற்றுகளாக நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 89,013 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை விட சுமார் 40707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் தினகரன்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவு குறித்து நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஓ.எஸ் மணியன் “ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் வராமல் டிடிவி தினகரன் பார்த்துக்கொள்ள வேண்டும். தினகரனின் வெற்றி நீடிக்காது, நிலைக்காது” என தெரிவித்துள்ளார்.






