முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பு மற்றும் முதுபெரும் தலைவர் கலைஞர் உடல்நிலை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு, அரசியல் தளத்தில் கால் பதித்திட முயன்றுவருகின்றனர் திரைத்துறை பிரபலங்கள். அவர்களில் ரஜினியும், கமலும் முதல் இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்துவருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் பேசியதாவது, “என் அரசியல் அறிவிப்புகுறித்து அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நான் அரசியலில் வருவதில் மக்களைவிட ஊடகங்களுக்குதான் ஆர்வம் அதிகம். போர்வரும் போது பார்க்கலாம் என்றேன்.போர் என்றால் தேர்தல் தானா?
அரசியலில் நான் வருவது புதிதல்ல. 1996 ஆம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது. வியூகம் வேண்டும். அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம். எனவே, வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவேன். என்ன செய்தாலுமே ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் முக்கியம்” என பேசியுள்ளார்.






