நத்தார் கொண்டாட்டம் சாப்பிடச் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!

67971புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் நத்தார் கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வென்னப்புவ தென் உல்ஹிட்டியாவ என்னும் இடத்தில் நத்தார் பண்டிகையன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நத்தார் விருந்துபசாரமொன்றின் போது வீட்டு உரிமையாளருக்கும் விருந்துபசாரத்தில் பங்கேற்றவர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது வீட்டு உரிமையாளர் தனது மாமா ஒருவரை துப்பாக்கி ஒன்றை காண்பித்து மிரட்டி கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த குறித்த நபர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதான வீட்டின் உரிமையாளர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.