ஒரே குடும்பத்தை சேர்ந்த மகள் தற்கொலை; தாய் மரணம்!

5a3e0696d4a6a-IBCTAMILகரூர் மாவட்டத்தில் செய்யாத தவறுக்காக மகள் தற்கொலை செய்துகொண்டதால் அதனை கேள்வியுற்ற தாயும் அதிர்ச்சியில்இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்ராஜ்,மாணிக்காயி மகள் மாரியம்மாள் பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கபட்டியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் கிளை தபால் அலுவலராக பணியாற்றிவந்த நிலையில்,கடந்த 15 நாள்களுக்கு முன் தான் பணியாற்றிவரும் அஞ்சல் அலுவலகத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்தது தெரியவந்துள்ளது.தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் கணக்கில் குறைந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை அஞ்சல் அலுவலகத்தில் திருப்பிச் செலுத்தி,அதை சரிசெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும்,தான்  சரியாக பணியாற்றியும் பணம் காணாமல் போனதை நினைத்து மாரியம்மாள் மன வேதனையில் கடந்த 16 ஆம் திகதி தனது வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கிவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிகிச்சை பலனின்றி,20ஆம் திகதி மாரியம்மாள் இறந்ததால் தகவல் அறிந்த மாரியம்மாளின் தாய் மாணிக்காயியும் அதிர்ச்சியில் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.