ஸ்ரீலங்காவில் சட்டவாட்சியை வெற்றிகரமாக உறுதிப்படுத்தியுள்ள அரசாங்கம், பொலிஸார் மீதான மக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பியுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், சட்டத்திற்கு மேல் ஒருவரும் இல்லை என்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
அமைதி மற்றும் ஒற்றுமையுடன் வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸார் மீது மக்களுக்கு மதிப்பு இருக்கவில்லை எனவும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை நிறுவியதன் மூலம் அதனை நல்லாட்சி அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸாரின் திறன் விருத்தி செயற்பாடுகளுக்கு பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.






